திங்கள், 3 ஆகஸ்ட், 2015

தமிழ் எண்கள் 

தமிழ் எண்களின் எழுத்துருக்கள் 

புதன், 24 ஜூலை, 2013

எதிர்நிலையணி

அஃதாவது உபமேனத்திற்கு குறைவுதோன்றச் சொல்லுதலாம், இது உவமையணிக்கு எதிரியதாய் நிற்றலின் அப்பெயர்த்து.இதனை வடநூலார் பிரதீபாலங்கார மென்பர்.இவ்வணி ஐந்து வகைப்படும்.

1.உலகத்தில் உவமானமாய்ப் பிரசித்தமாக வழங்குகின்ற பொருளை உவமேயமாக்கிச் சொல்லுதல்.

உதாரணம்

அதிர்கடல்சூழ் வையத் தணங்குமுகம் போல
மதியஞ் செயுமே மகிழ்.


2.அவ்ர்ணியத்தை உவமேயமாகக் காட்டி வர்ணியத்தை இகழ்தல்.

உதாரணம்

பொன்செருக்கை மாற்றமெழிற் பூவை திருமுகமே
உன்செருக்குப் போது மொழிகவினிக்-கொன்செருக்கு
மிக்கமக ரக்கடற்பூ மிக்கண் மகிழ்செயலால்
ஒக்கு மதியு முனை


3.வர்ணியத்தை உவமேயமாகக் காட்டி அவர்ணியத்தை இகழ்தல்.

உதாரணம்

ஆற்ற லுறுகொலையி லாரெனுக்கொப் பென்றந்தோ
கூற்றுவனநீ வீண்செருக்குக் கொள்கின்றாய்-சாற்றுவள்கேள்
வெண்டிரைசூழ் ஞால மிசையொனக்கொப் பாகவே
ஒண்டொடிதன் நீள்விழியு முண்டு


4.வர்ணியத்தோடு அவர்ணியத்திற்கு ஒப்புமை இன்றெனச் சொல்லுதல்.

உதாரணம்

இறைவி மதுரமொழிக் கிண்ணமுதொப் பாமென்
றறைவ தபவாத மாம்.


5.உவமானத்தை வீண் என்று சொல்லுதல்.

உதாரணம்

செங்கயற்க ணாயுன் றிருமுகத்தைப் பார்ப்பவர்க்குப்
பங்கயத்தா லுண்டோ பயன்

செவ்வாய், 23 ஜூலை, 2013

இயைபையின்மையணி

இயைபையின்மையணி

ஒரு வாக்கியத்துக்குள் ஒரு பொருளையே உவமானமாகவும் உவமேயமகவும் சொல்வதற்கு இயைபையின்மையணி என்று பெயர்.இதனை அந் ந வயாலங்க்கார என்றும் பொது நீங்க்குவமை எனவும் வசங்க்குவர்.

உதாரணம்

தேனே யனையமொழிச் சேயிழையாள் செவ்வியினாற்
றனே யுவமை தனக்கு.

இதில் இப்பொருளுக்கு ஒப்பான இரண்டாவது ஒன்றில்லை என்பது கருத்து.

உருவக அணி

உருவக அணி என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் மறுதலை 
எடுத்துக்காட்டு

இதுதான் அது.
அவளின் முகம்தான் சந்திரன்

* பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
* மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி

இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.

* உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
* உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)

* உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
* உருவக அணி - புலி வந்தான்

* உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
* உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)

* உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
* உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)

அஃதாவது உவமேயத்தில் உவமானத்தை ஒற்றுமையினாலாவது அதன் செய்கையினாலாவது ஆரோபித்தலாம்.

இதனை வட நூலார் ரூபகாலங்க்காரமென்பர்.ஆரோபாவமேன்பது உவமேயம் உவமானங்களின் அபேத புணர்ச்சி.
இவ்வணி ஒற்றுமையுருவகம் ,அதன் செய்கையுருவகம் என இரு வகைப்படும்.இவற்றை வட நூலார் அபேத ரூபகமென்றும் தாத்ரூப்யமாகவென்றுங் கூறுவர்.

உவமையணி

தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது

உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.


உவமானம் - ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
உவமேயம் - ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்
உவமை உருபுகள்- உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
பொதுத்தன்மை - இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை).


சான்று:
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

இங்கு,
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல

வியாழன், 18 நவம்பர், 2010

இலக்கண புத்தகங்கள்

நண்பர்களே என்னால் தொடர்ந்து பதிவிட முடியாத காரணத்தால் இலக்கணம் பற்றி அறிய முனைவோருக்கு உதவிட சில புத்தகங்களின் இணைப்பை இங்கு வழங்குகிறேன்.

1.அணியிலக்கணம்
2.இலக்கணக் குறிப்பு
3.இலக்கண விதிகள்
4.இலக்கண விளக்கம்
5.அரசுப் பாடநூல்
6.நன்னூல் விளக்கம்நன்றி.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சொல்-பெயர்ச்சொல் பகுதி 2

அஃறிணைப் பெயர்கள்

து விகுதி பெற்று வருவன-ஒருமை (அது,இது,உது,அஃது,இஃது,உஃது,எது,யாது,ஏது,குறியது,நெடியது)

அ,ஐ விகுதி பெற்று வருவன-பன்மை
(அவை,இவை,உவை,எவை,யாவை,பிற,மற்றையன,நல்லவை,தீயவை)

ஒருமிக்கும் பன்மைக்கும் பொதுவானவை

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

சொல் வகைகள்-பெயர்ச் சொல் பகுதி 1

பெயரை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
பெயர்ச்சொற்கள் உயர் திணைக்கு வருவனவும்,அஃறிணைக்கு வருவனவும்,பொதுத் திணைக்கு வருவனவும் என மூன்று வகைப்படும்.
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர் திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஒன்ன உரிமையும் 
அம்மூ வுருபின் தோன்ற லாறே  -தொல்காப்பியம்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

யாப்பிலக்கணம்-பா வகைகள் பகுதி 1

அடிகள் இரண்டு முதலியவற்றை அடுக்கிக் கூறுவது பா எனப்படும்.பா வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா என நான்கு வகைப்படும்.

1.வெண்பா
                       வெண்பா வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும்.இவ்வகையில் அமைந்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை திருக்குறள்,நாலடி நானூறு,முத்தொள்ளாயிரம் ,நீதி வெண்பா ,நளவெண்பா ,திருப்பாவை,திருவெம்பாவை முதலியன.இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய மற்றும் புதிய தமிழ் நூல்கள்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

யாப்பிலக்கணம்-தொடை

தொடை
தொடை என்பது தொடுக்கப்படுவது எனப் பொருள்படும்.மலர்களைத் தொடுப்பது போலவே சீர்களிலும்,அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது தொடையாகும். பாவின் ஓசையின்பத்திற்கும் சிறப்பிற்கும் இத்தொடை உறுப்பு வேண்டுவதாகும்.தொடையற்ற மொழி நடையற்றுப் போகும்என்பது பழமொழியாகும்.
தொடை ஐந்து வகைப்படும்.அவை மோனைத் தொடை,எதுகைத் தொடை,முரண் தொடை

வியாழன், 22 ஏப்ரல், 2010

யாப்பிலக்கணம்-தளை,தொடை


தளை
சீர்கள் ஒன்றோடொன்று கட்டுப்பட்டு நிற்கும் நிலை,தளை எனப்படும். நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது தளை எனப்படும்.நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் நேர் முன் நேராகவும் நிரை முன் நிரையாகவும் வருவது ஒன்றுவதெனப்படும்.நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் நேர் நிரையாகவும்,நிரை நேராகவும் வருவது ஒன்றாதெனப்படும்.
உல/கினில்     - ஒழு/க்கம்
நிரை/நிரை  - நிரை/நேர்      ஒன்றி வந்தது
சீ/லம்     -என்/னும்
நேர்/நேர்   -நேர்/நேர்

னி/யிரு  -முந்/நீர்
நிரை+நேர் -நிரை+நேர்          ஒன்றாமல் வந்த்து
கெட்/ட    -பொரு/ளின்
நேர்+நேர்  -நிரை+நேர்

     தளை ஏழு வகைப்படும் அவை,
  1. நேரொன்றாசிரியத்தளை          -மா முன் நேர்
  2. நிரையொன்றாசிரியத்தளை  -விள முன் நிரை
  3. இயற்சீர் வெண்டளை       -மா முன் நிரை,விள முன் நேர்
  4. வெண்சீர் வெண்டளை       -காய் முன் நேர்
  5. கலித்தளை                -காய் முன் நிரை
  6. ஒன்றிய வஞ்சித்தளை      -கனி முன் நிரை
  7. ஒன்றாத வஞ்சித்தளை      -கனி முன் நேர்
தளை
விதி
உதாரணம்
நேரொன்றாசிரியத்தளை
மா முன் நேர்
வங்/கம்-தன்/னொடும்
நேர்+நேர்-நேர்/நிரை
தேமா
நிரையொன்றாசிரியத்தளை
விள முன் நிரை
பசிப்/பிணி-கறு/கென
நிரை+நிரை-நிரை+நிரை
கருவிளம் (நின்ற சீர்)
இயற்சீர் வெண்டளை
மா முன் நிரை,விள முன் நேர்
பூம்பு/கார் போற்று/தும்
நேர்+நிரை-நேர்+நிரை
ஓங்/கிப் பரந்/தெழு
நேர்+நேர்-நிரை+நிரை
வெண்சீர் வெண்டளை
காய் முன் நேர்
நெடுங்/கட/லும்-தன்/நீர்/மை
நிரை+நிரை+நேர்-நேர்+நேர்+நேர்
கருவிள்ங்காய்
கலித்தளை
காய் முன் நிரை
நீ/ரா/ருங்-கட/லுடுத்/த
நேர்+நேர்+நேர்-நிரை+நிரை+நேர்
தேமாங்காய்
ஒன்றிய வஞ்சித்தளை
கனி முன் நிரை
தண்/டாம/ரைத்-தனி/மலர்/மிசை
நேர்+நேர்+நிரை-நிரை+நிரை+நேர்
தேமாங்கனி
ஒன்றாத வஞ்சித்தளை
கனி முன் நேர்
கா/னில்/வளர்-கா/ராப்/போல்
நேர்+நேர்+நிரை-நேர்+நேர்+நேர்
தேமாங்கனி

அடி
சீர்கள் பல அடுத்து நடப்பது அடியாகும்.அது ஐந்து வகைப்படும்.அவை குறளடி,சிந்தடி,அளவடி,நெடிலடி,கழிநெடிலடி என்பனவாகும்.
1.குறளடி
     இரண்டு சீர்களாலான அடி குறளடியாகும்.
உதாரணம் பொன்செய் மன்றில்வாழ் இதில் ஓரடியால் இரு சீர்கள் மட்டும் அமைந்திருப்பதைக் காணலாம்.
2.சிந்தடி
     மூன்று சீர்களாலான அடி சிந்தடியாகும்.
உதாரணம் வாய்மையால் காணப்படும். வெண்பாவின் ஈற்றடி சிந்தடியாய் இருப்பதைக் காண்க.
3.அளவடி
     நான்கு சீர்களால் அமையும் அடி அளவடியாகும்.இதனை நேரடி எனவும் வழங்குவர்.
உதாரணம்:ஆதிரை யிட்டெனள் ஆருயிர் மருந்தென்
அளவடி,வெண்பா ஆசிரியப்பா,கலிப்பாக்களில் அமைந்து வருவதைக் காண்க.
4.நெடிலடி
     ஐந்து சீர்களாலான அடி நெடிலடியாகும்.
உதாரணம்:வையம் ஏழுடை மன்னவன் அவ்வுரை வழங்க
4.கழிநெடிலடி
ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களாலானது கழினெடிலடியாகும்.
உதாரணம்:
நின்றவூர்ப் பூச லன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த-அறுசீர்க் கழிநெடிலடி
நாட்டொடு சேராத தனிபோக உரிமை
நடவாதங் கினியென்று நாமறிதல் பெருமை.-எண்சீர்க் கழி நெடிலடி

புதன், 21 ஏப்ரல், 2010

யாப்பிலக்கணம்-சீர்

சீர்
இருவகை அசைகளும் தனித்தோ இணைந்தோ அமைவது சீர் எனப்படும்.அஃது ஓரசைச் சீர்,ஈரசைச் சீர் ,மூவசைச் சீர் ,நான்கசைச் சீர் என நான்கு வகைப்படும்.
ஓரசைச்சீர்
வெண்பாவின் ஈற்றில் நேரசை நிரையசையுள் ஏதேனும் ஒன்று தனித்து நின்று சீராய் அமையும்.அவை அசைச்சீர் எனப்படும்.அவற்றிற்கு வாய்ப்பாடு நாள்(ஓரசை நேர்) , மலர்(ஓரசை நிறை) என்பனவாம்
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளம்குன்றிக் கால்
கால்-நேர்-நாள்(வாய்ப்பாடு)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை
தலை-நிரை-மலர்(வாய்ப்பாடு)
இவ்வாறு இலக்கண முறைப்படி,வெண்பாவின் ஈற்றில் ஒரு நேரசையாகவோ நிரையசையாகவோ தனித்து வந்தால் அவற்றிற்கு முறையே நாள்,மலர் என வாய்ப்பாடு கூற வேண்டும்.
ஆய்வுச்செய்தி
திருக்குறளில் 174 குறட்பாக்களின் ஈற்றுச்சீர் நாள் வாய்ப்பாட்டிலும்,665 குறட்பாக்களின் ஈற்றுச் சீர் மலர் வாய்ப்பாட்டினுலும் அமைந்துள்ளது என திருக்குறள் பதின்கவனகர் திரு.இராமய்யா அவர்கள் கூறுகிறார்.


காசு,பிறப்பு
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பெற
செய்யாமை செய்யமை நன்று.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
நன்று-நன்/று-நேர்பு
விளக்கு-விளக்/கு-நிரைபு
இவ்வாறு வெண்பாவின் ஈற்றில் நேரசை,நிரையசையாக தனித்து வருவதோடு மட்டுமல்லாமல் நேர்பு,நிரைபு என குற்றியலுகர வாய்ப்பாட்டுச் சீர்களும் அமைவதுண்டு.
முதலசை நேர் நேர்பு எனவும்,முதலிசை நிரை நிரைபு எனவும் வழங்கப்படுகிறது.நேர்பு-காசு,நிரைபு-பிறப்பு
ஈரசைச் சீர்
நேர், நிரை என்னும் அசைகள் இரண்டிரண்டாக இணைந்து வரும் சீர்கள் ஈரசை சீராகும்.ஈரசைச்சீர் மாச்சீர் இரண்டும்,விளச்சீர் இரண்டுமாய்  நான்கும் ஆசிரியப் பாவிற்குரியனவாகும்.இவை இயற்சீர் எனவும் ஆசிரிய உரிச்சீர் எனவும் வழஙப்படும்.
மூவசைச்சீர்
மாவின முன்னா காய்கனி உடையபின்
வெண்பா வஞ்சி யுரிச்சீர் ஆமே
ஈரசைச் சீர் நான்கனோடும் ,நேரசை நிரையசை இரண்டினையும் தனித் தனியாக இறுதியில் இணைத்தால்    மூவசைச்சீர் எட்டாகும்.அவற்றுள் காய் என முடிபவை நான்கும்,கனி என முடிபவை நான்கும் உள்ளன.
காய்ச்சீர் நான்கிலும் நேரசை ஈற்றசையாக வரும்.இச்சீர்கள் வெண்பாவிற்குரியதால் வெண்பாவுரிச்சீர் எனவும் வழங்கப்படும்.
கனிச்சீர் நான்கிலும் நிரையசை ஈற்றசையாக வரும்.இச்சீர்கள் வஞ்சிப் பாவிற்குரியதால் வஞ்சியுரிச்சீர் எனவும் வழங்குவர்.


நான்கசைச்சீர்
மூவசைச் சீருடன் நேரசை, நிரையசைகளை இறுதியில் சேர்த்தால் நாலசைச்சீர் பதினாறாம்.இதை பொதுச்சீர் எனவும் வழங்குவர்.
இதில் நேரீற்றுப் பொதுச்சீர் எட்டும்,னிரையீற்றுப் பொதுச்சீர் எட்டும் உள்ளன.
சீர் வகைகளும் அதன் வாய்ப்பாடுகளும்
.எண்
சீர் வகை/அசை
வாய்ப்பாடு
துணைப்பெயர்கள்
1
ஓரசைச்சீர்

நேர்
நாள்


நிரை
மலர்


நேர்பு
காசு


நிரைபு
பிறப்பு

2
ஈரசைச்சீர் (ஆசிரியவுரிச்சீர்)

நேர்+நேர்
நேர்மா
மாச்சீர்

நிரை+நேர்
நிரைமா


நிரை+நிரை
கருவிளம்
விளச்சீர்

நேர்+நிரை
கூவிளம்


3
மூவசைச்சீர்

நேர்+நேர்+நேர்
தேமாங்காய்
காய்ச்சீர் (வெண்பாயுரிச்சீர்)

நிரை+நேர்+நேர்
புளிமாங்காய்


நிரை+நிரை+நேர்
கருவிள்ங்காய்


நேர்+நிரை+நேர்
கூவிளங்காய்


நேர்+நேர்+நிரை
தேமாங்கனி
கனிச்சீர் (வஞ்சியுரிச்சீர்)

நிரை+நேர்+நிரை
புளிமாங்கனி


நிரை+நிரை+நிரை
கருவிளங்கனி


நேர்+நிரை+நிரை
கூவிளங்கனி

4
நாலசைச்சீர்(பொதுச்சீர்)

நேர்+நேர்+நேர்+நேர்
தேமாந்தன்பூ
பூச்சீர்(நேரீற்றுப் பொதுச்சீர்)

நிரை+நேர்+நேர்+நேர்
புளிமாந்தன்பூ


நிரை+நிரை+நேர்+நேர்
கருவிளந்தன்பூ


நேர்+நிரை+நேர்+நேர்
கூவிளந்தன்பூ


நேர்+நேர்+நிரை+நேர்
தேமநறும்பூ


நிரை+நேர்+நிரை+நேர்
புளிமாநறும்பூ


நிரை+நிரை+நிரை+நேர்
கருவிளந்றும்பூ


நேர்+நிரை+நிரை+நேர்
கூவிள்நறும்பூ


நேர்+நேர்+நேர்+நிரை
தேமாந்த்தண்ணிழல்
நிழற்சீர் (நிரையீற்றுப் பொதுச்சீர்)

நிரை+நேர்+நேர்+நிரை
புளிமாந்த்தண்ணிழல்


நிரை+நிரை+நேர்+நிரை
கருவிழந்த்தண்ணிழல்


நேர்+நிரை+நேர்+நிரை
கூவிளந்த்தண்ணிழல்


நேர்+நேர்+நிரை+நிரை
தேமாநறுனிழல்


நிரை+நேர்+நிரை+நிரை
புளிமாநறுநிழல்


நிரை+நிரை+நிரை+நிரை
கருவிளநறுனிழல்


நேர்+நிரை+நிரை+நிரை
கூவிளநறுநிழல்


கலிப்பாவிற்கென தனிச்சீர் இல்லை.மாச்சீர்,விளச்சீர்,காய்ச்சீர்,கனிச்சீர் இவையே விரவி வரும்.னாலசைச்சீர் வஞ்சிப்பாவில் வரும்.வெண்பாவில் நாலசைச்சீர் வாரா. ஆசிரியப்பா,கலிப்பா ஆகியவற்றுள் குற்றுகரம் வந்தாலொழிய நாலசைச்சீர் வாரா.