செவ்வாய், 23 ஜூலை, 2013

உருவக அணி

உருவக அணி என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் மறுதலை 
எடுத்துக்காட்டு

இதுதான் அது.
அவளின் முகம்தான் சந்திரன்

* பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
* மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி

இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.

* உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
* உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)

* உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
* உருவக அணி - புலி வந்தான்

* உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
* உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)

* உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
* உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)

அஃதாவது உவமேயத்தில் உவமானத்தை ஒற்றுமையினாலாவது அதன் செய்கையினாலாவது ஆரோபித்தலாம்.

இதனை வட நூலார் ரூபகாலங்க்காரமென்பர்.ஆரோபாவமேன்பது உவமேயம் உவமானங்களின் அபேத புணர்ச்சி.
இவ்வணி ஒற்றுமையுருவகம் ,அதன் செய்கையுருவகம் என இரு வகைப்படும்.இவற்றை வட நூலார் அபேத ரூபகமென்றும் தாத்ரூப்யமாகவென்றுங் கூறுவர்.

அவ்விரண்டும் மிகை,குறை,அவையின்மை என்பவைகளான் மும்மூன்றாகும் .

1.மிகையொற்றுமையுருவகம்

உதாராணம்

உயர்புகழ்நங் கோனா முருவுடைய மாறன் 
நயவழகை நாடுமென் கண்.

இதில்,மாறனுக்கு உவமை மிகையாகச் சொல்லப் பட்டது.

2.குறை யொற்றுமையுருவகம்

உதாராணம்

எல்லோரு மேத்துபுக ழேந்தலிவ னெற்றிவிழி 
இல்லாத சங்கரனே யாம்.

இதில்,சங்கரனுக்கு நெற்றிக்கண்  உவமை குறைவாகச்  சொல்லப் பட்டது.
 
3.அவையிலொற்றுமையுருவகம்

உதாராணம்

பவக்கடல் கடந்துமுத்தியங் கரையிற்
 படர்பவர் திகைப்பேற நோக்கித்
தவக்கலனடத்த வளர்ந்தேழு சோண
சைலனே கயிலைநா யகனே  .

இதில் கடல் முதலியவை மிகை குறைவின்றிச் சமமாக சொல்லப்பட்டது.

4.மிகையதன்செய்கையுருவகம்

 உதாராணம்
 

மங்கை வதன மதியங் களங்க்கமுடைத் 
திங்களைமிக் கொள் செயும்  
 
இதில் முகமதிக்கு  களங்க்மில்லாமை அதிகமாகச் சொல்லப்பட்டது.ஈண்டு முகமதியென்பதற்குச சந்திரனது செய்கையுடைய  முகமென்பது பொருள்.
 
5.குறையதன்செய்கையுருவகம்
 
உதாராணம்

 போருதிரைசேர் தண்பாற் புணரிபிற வாவே 
றேருதிருவிம் மாதென் றுணர்
இதில் இத்திருவுக்குப் பாற்கடலிற் பிறத்தல் குறைவாகச் சொல்லப்பட்டது.
 
6.அவையள்தான் செய்கையுருவகம் 
 
உதாராணம்
 
 இம்மான் முகமதியே யின்பு செயமாதனால் 
அம்மா மதிப்பயனென் னாம்
இதில் முகமதி மிகை குறைவின்றிச் சமமாக சொல்லப்பட்டது.

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக