வியாழன், 22 ஏப்ரல், 2010

யாப்பிலக்கணம்-தளை,தொடை


தளை
சீர்கள் ஒன்றோடொன்று கட்டுப்பட்டு நிற்கும் நிலை,தளை எனப்படும். நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது தளை எனப்படும்.நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் நேர் முன் நேராகவும் நிரை முன் நிரையாகவும் வருவது ஒன்றுவதெனப்படும்.நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் நேர் நிரையாகவும்,நிரை நேராகவும் வருவது ஒன்றாதெனப்படும்.
உல/கினில்     - ஒழு/க்கம்
நிரை/நிரை  - நிரை/நேர்      ஒன்றி வந்தது
சீ/லம்     -என்/னும்
நேர்/நேர்   -நேர்/நேர்

னி/யிரு  -முந்/நீர்
நிரை+நேர் -நிரை+நேர்          ஒன்றாமல் வந்த்து
கெட்/ட    -பொரு/ளின்
நேர்+நேர்  -நிரை+நேர்

     தளை ஏழு வகைப்படும் அவை,
  1. நேரொன்றாசிரியத்தளை          -மா முன் நேர்
  2. நிரையொன்றாசிரியத்தளை  -விள முன் நிரை
  3. இயற்சீர் வெண்டளை       -மா முன் நிரை,விள முன் நேர்
  4. வெண்சீர் வெண்டளை       -காய் முன் நேர்
  5. கலித்தளை                -காய் முன் நிரை
  6. ஒன்றிய வஞ்சித்தளை      -கனி முன் நிரை
  7. ஒன்றாத வஞ்சித்தளை      -கனி முன் நேர்
தளை
விதி
உதாரணம்
நேரொன்றாசிரியத்தளை
மா முன் நேர்
வங்/கம்-தன்/னொடும்
நேர்+நேர்-நேர்/நிரை
தேமா
நிரையொன்றாசிரியத்தளை
விள முன் நிரை
பசிப்/பிணி-கறு/கென
நிரை+நிரை-நிரை+நிரை
கருவிளம் (நின்ற சீர்)
இயற்சீர் வெண்டளை
மா முன் நிரை,விள முன் நேர்
பூம்பு/கார் போற்று/தும்
நேர்+நிரை-நேர்+நிரை
ஓங்/கிப் பரந்/தெழு
நேர்+நேர்-நிரை+நிரை
வெண்சீர் வெண்டளை
காய் முன் நேர்
நெடுங்/கட/லும்-தன்/நீர்/மை
நிரை+நிரை+நேர்-நேர்+நேர்+நேர்
கருவிள்ங்காய்
கலித்தளை
காய் முன் நிரை
நீ/ரா/ருங்-கட/லுடுத்/த
நேர்+நேர்+நேர்-நிரை+நிரை+நேர்
தேமாங்காய்
ஒன்றிய வஞ்சித்தளை
கனி முன் நிரை
தண்/டாம/ரைத்-தனி/மலர்/மிசை
நேர்+நேர்+நிரை-நிரை+நிரை+நேர்
தேமாங்கனி
ஒன்றாத வஞ்சித்தளை
கனி முன் நேர்
கா/னில்/வளர்-கா/ராப்/போல்
நேர்+நேர்+நிரை-நேர்+நேர்+நேர்
தேமாங்கனி

அடி
சீர்கள் பல அடுத்து நடப்பது அடியாகும்.அது ஐந்து வகைப்படும்.அவை குறளடி,சிந்தடி,அளவடி,நெடிலடி,கழிநெடிலடி என்பனவாகும்.
1.குறளடி
     இரண்டு சீர்களாலான அடி குறளடியாகும்.
உதாரணம் பொன்செய் மன்றில்வாழ் இதில் ஓரடியால் இரு சீர்கள் மட்டும் அமைந்திருப்பதைக் காணலாம்.
2.சிந்தடி
     மூன்று சீர்களாலான அடி சிந்தடியாகும்.
உதாரணம் வாய்மையால் காணப்படும். வெண்பாவின் ஈற்றடி சிந்தடியாய் இருப்பதைக் காண்க.
3.அளவடி
     நான்கு சீர்களால் அமையும் அடி அளவடியாகும்.இதனை நேரடி எனவும் வழங்குவர்.
உதாரணம்:ஆதிரை யிட்டெனள் ஆருயிர் மருந்தென்
அளவடி,வெண்பா ஆசிரியப்பா,கலிப்பாக்களில் அமைந்து வருவதைக் காண்க.
4.நெடிலடி
     ஐந்து சீர்களாலான அடி நெடிலடியாகும்.
உதாரணம்:வையம் ஏழுடை மன்னவன் அவ்வுரை வழங்க
4.கழிநெடிலடி
ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களாலானது கழினெடிலடியாகும்.
உதாரணம்:
நின்றவூர்ப் பூச லன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த-அறுசீர்க் கழிநெடிலடி
நாட்டொடு சேராத தனிபோக உரிமை
நடவாதங் கினியென்று நாமறிதல் பெருமை.-எண்சீர்க் கழி நெடிலடி

2 கருத்துக்கள்:

Murugeswari Rajavel சொன்னது…

பதிவுக்கு நன்றி அசோகன்!

Unknown சொன்னது…

நன்றி, வாழ்த்துகள்!

கருத்துரையிடுக