எடுத்துக்காட்டு
இதுதான் அது.
அவளின் முகம்தான் சந்திரன்
* பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
* மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.
* உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
* உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
* உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
* உருவக அணி - புலி வந்தான்
* உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
* உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
* உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
* உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
அஃதாவது உவமேயத்தில் உவமானத்தை ஒற்றுமையினாலாவது அதன் செய்கையினாலாவது ஆரோபித்தலாம்.
இதனை வட நூலார் ரூபகாலங்க்காரமென்பர்.ஆரோபாவமேன்பது உவமேயம் உவமானங்களின் அபேத புணர்ச்சி.
இவ்வணி ஒற்றுமையுருவகம் ,அதன் செய்கையுருவகம் என இரு வகைப்படும்.இவற்றை வட நூலார் அபேத ரூபகமென்றும் தாத்ரூப்யமாகவென்றுங் கூறுவர்.