ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

யாப்பிலக்கணம்-பா வகைகள் பகுதி 1

அடிகள் இரண்டு முதலியவற்றை அடுக்கிக் கூறுவது பா எனப்படும்.பா வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா என நான்கு வகைப்படும்.

1.வெண்பா
                       வெண்பா வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும்.இவ்வகையில் அமைந்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை திருக்குறள்,நாலடி நானூறு,முத்தொள்ளாயிரம் ,நீதி வெண்பா ,நளவெண்பா ,திருப்பாவை,திருவெம்பாவை முதலியன.இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய மற்றும் புதிய தமிழ் நூல்கள்
ஏராளமானவை.
                        வெண்பா குறள் வெண்பா , சிந்தியல் வெண்பா ,நேரிசை வெண்பா ,இன்னிசை வெண்பா ,பஃறொடை வெண்பா ,சவலை வெண்பா என ஆறு வகைப்படும்.
அ)குறள் வெண்பா
இவ்வெண்பாவிற்கு நான் விளக்கம் சொல்லவே தேவையில்லை. ஆம் இவ்வெண்பாவில் அமைந்த திருக்குறள் அதன் பெருமையை சொல்லும்.இரண்டு அடிகளால் ஆன வெண்பா குறள் வெண்பாவாகும்.இதற்கு உதாரணமாக 1330 குறட்பாக்களும்.
ஆ) சிந்தியல் வெண்பா
இது மூன்று அடிகள் மட்டுமே கொண்டிருக்கும். இவற்றில் முதல் இரண்டு அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருக்கும். இவ்வாறு நான்கு சீர்களைக் கொண்டுள்ள அடிகள் அளவடி என அழைக்கப்படுகின்றன. சிந்தியல் வெண்பாவின் மூன்றாவது அடி, சிந்தடி என அழக்கப்படும், மூன்று சீர்களைக் கொண்ட அடியாக இருக்கும்.
சிந்தியல் வெண்பாக்களில் இரண்டு வகைகள் உண்டு. அவை,
1.இன்னிசை சிந்தியல் வெண்பா
2.நேரிசை சிந்தியல் வெண்பா

இ) நேரிசை வெண்பா
இங்கே காணவும்

ஈ) இன்னிசை வெண்பா

உ)பஃறொடை வெண்பா
3 கருத்துக்கள்:

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

நல்ல முயற்சி.வாழ்த்துகள்.

Asokan சொன்னது…

நன்றி அப்துல்லா அவர்களே

Unknown சொன்னது…

ungal Arvam ennai viyappadaya vaikkirathu. ungal Arvam inRupOl endrum irukka ennudaiya vaazhthukaL

கருத்துரையிடுக