புதன், 21 ஏப்ரல், 2010

யாப்பிலக்கணம்-எழுத்து,அசை


எழுத்து
எழுத்திலக்கணத்தில் சொல்லப்பட்ட அனைத்து எழுத்துக்களும் யாப்பிற்கும் கொள்ளப்படும். உயிரெழுத்து .மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ,ஆய்த எழுத்து எனக் கூறப்படும் தமிழ் எழுத்துக்கள் யாப்பிலக்கணத்தில் குறில்,னெடில்,ஒற்று (மெய்) என மூன்று வகைகளாக அசைக்கு உறுப்புகளாக அமைந்துள்ளன.
வானம்
வா-நெடில்
ன-குறில்
ம்-ஒற்று
அசை
குறில்,நெடில்,ஒற்று என்னும் எழுத்துக்களால் அசைக்கப்படுவது (கட்டப் படுவது) அசை எனப்படும்.அது நேரசை,நிரையசை என இருவகைப்படும்.
குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில் நெடிலே
நெறியே வரினும் நிறைந்தொற்றெடுப்பினும் நேர்நிரை என்ற்றி-காரிகை
நேரசை
ப    -தனிக்குறில்
பா   -தனி நெடில்
பல்  -குறிலொற்று
பால் -நெடிலொற்று
குறில் தனித்தும் ஒற்றெடுத்தும்,நெடில் தனித்தும் ஒற்றெடுத்தும் வருவது நேரசையாகும்.
வாழ்க     -வாழ்/க
வாழ்      -நெடிலொற்று
க         -தனிக்குறில்    நேரசை
நாடு       -நா/டு
நா        -தனி நெடில்
டு         -தனிக்குறில்    நேரசை
தனிக்குறில் சொல்லின் முதலில் வந்து நேரசையாகாது.சொல்லிற்கு முதலில் வரும் குறில் அடுத்து ஒற்று வந்தால் மட்டுமே நேரசையாகும் (பட்டம்-பட்/டம்).நெடிலுக்குப் பின்னும்,ஒற்றுக்குப் பின்னும் வரும் ,தனிக்குறில் நேரசையாகும் (ஆ/று,கல்/வி).நெடில் எவ்விட்த்தும் தனித்து வரினும் ஒற்றெடுத்து வரினும் நேரசையாகும் (நா/டு,வாழ்/க).

நிரையசை
கனி-குறிலிணை
நிலா-குறில் நெடில்
அறம்-குறிலிணை ஒற்று
புலால்-குறில் நெடில் ஒற்று
குறில் இணைந்தும் ,ஒற்றெடுத்தும்,குறில் நெடில் இணைந்தும் அவை ஒற்றெடுத்தும் வருவது நிரை இசையாகும்.
சுடுகதிர்   -சுடு/கதிர்
சுடு        -குறிலிணை
கதிர்       -குறிலிணை ஒற்று நிரையசை
துழாவினார் -துழா/வினார்
துழா       -குறில் நெடில்
வினார்    -குறில் நெடிலொற்று நிரையசை
ஒற்றெழுத்து தனி அலகு பெறாது.அது முன்னர் உள்ள எழுத்தோடு சேர்ந்து ஒலிக்கும்.ஈரொற்று எழுத்துக்கள் சேர்ந்து வரினும் ஒன்றாகவே கொள்ள வேண்டும்.
விக்கிபீடியா பக்கங்களிலிருந்து நாம் எளிதாக அறிந்து கொள்ள கீழ்க்காணும் அட்டவணையைப் பாருங்கள்.
முதல் எழுத்து
இரண்டாம் எழுத்து
மூன்றாம் எழுத்து
எடுத்துக்காட்டு
குறில்
-
-
,
நெடில்
-
-
, பூ
குறில்
ஒற்று
-
அன், விண்
நெடில்
ஒற்று
-
ஆள், தீர்
குறில்
குறில்
-
அடி, மன
குறில்
நெடில்
-
அடா, புகா
குறில்
குறில்
ஒற்று
அடர், திகில்
குறில்
நெடில்
ஒற்று
அதால், தொழார்
மேற்கண்டவற்றுள் முதல் நான்கும் நேரசை என்றும் ஏனையவை நிரையசை என்றும் குறிப்பிடப்படுகின்றன.மேலும் அசை பிரிப்பதைப் பற்றி விரிவாக காண விக்கிபீடியாவின் இப்பக்கத்திற்கு செல்லவும். http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88

2 கருத்துக்கள்:

Dr Akilan Rajarethinam சொன்னது…

(வ்)

ஜெயபாண்டி சொன்னது…

Super

கருத்துரையிடுக