புதன், 21 ஏப்ரல், 2010

யாப்பிலக்கணம்-அறிமுகம்


செய்யுளுக்கு உரிய உறுப்புகளைக்(எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை) கொண்டு செய்யுள் இயற்றும் இலக்கணத்தைக் கூறுவது யாப்பிலக்கணமாகும்.
எழுத்துக்களைத் தனித்தோ அல்லது இணைத்தோ ஒலிப்பதை அசைத்தல் அல்லது இசைத்தல் என்பர்.அசையாவது நேரசை நிரையசை என இரு வகைப்படும்.பல அசைகள் சேர்ந்து அமைவது சீர் ஆகும்.சீர்கள் ஒன்றோடு ஒன்று கட்டி நிற்பதை தளை என்பர்.பல சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது அடி எனப்படும்.சீர்களிலும் அடிகளிலும் எதுகை மோனை அமையத் தொடுப்பதை தொடை என வழங்குவர்.அடிகள் இரண்டு முதலியவற்றை அடுக்கிக் கூறுவது பா எனப்படும்.இனி வரும் பதிவுகளில் செய்யுளின் உறுப்புகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக