புதன், 24 ஜூலை, 2013

எதிர்நிலையணி

அஃதாவது உபமேனத்திற்கு குறைவுதோன்றச் சொல்லுதலாம், இது உவமையணிக்கு எதிரியதாய் நிற்றலின் அப்பெயர்த்து.இதனை வடநூலார் பிரதீபாலங்கார மென்பர்.இவ்வணி ஐந்து வகைப்படும்.

1.உலகத்தில் உவமானமாய்ப் பிரசித்தமாக வழங்குகின்ற பொருளை உவமேயமாக்கிச் சொல்லுதல்.

உதாரணம்

அதிர்கடல்சூழ் வையத் தணங்குமுகம் போல
மதியஞ் செயுமே மகிழ்.


2.அவ்ர்ணியத்தை உவமேயமாகக் காட்டி வர்ணியத்தை இகழ்தல்.

உதாரணம்

பொன்செருக்கை மாற்றமெழிற் பூவை திருமுகமே
உன்செருக்குப் போது மொழிகவினிக்-கொன்செருக்கு
மிக்கமக ரக்கடற்பூ மிக்கண் மகிழ்செயலால்
ஒக்கு மதியு முனை


3.வர்ணியத்தை உவமேயமாகக் காட்டி அவர்ணியத்தை இகழ்தல்.

உதாரணம்

ஆற்ற லுறுகொலையி லாரெனுக்கொப் பென்றந்தோ
கூற்றுவனநீ வீண்செருக்குக் கொள்கின்றாய்-சாற்றுவள்கேள்
வெண்டிரைசூழ் ஞால மிசையொனக்கொப் பாகவே
ஒண்டொடிதன் நீள்விழியு முண்டு


4.வர்ணியத்தோடு அவர்ணியத்திற்கு ஒப்புமை இன்றெனச் சொல்லுதல்.

உதாரணம்

இறைவி மதுரமொழிக் கிண்ணமுதொப் பாமென்
றறைவ தபவாத மாம்.


5.உவமானத்தை வீண் என்று சொல்லுதல்.

உதாரணம்

செங்கயற்க ணாயுன் றிருமுகத்தைப் பார்ப்பவர்க்குப்
பங்கயத்தா லுண்டோ பயன்

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக